Sunday 27 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-07-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

திருவொற்றியூர் வாலிபரை கொலை செய்ய ரூ.8 லட்சம் வாங்கினோம்: பெண் தகவல்

சென்னை, 27-07-2014,
வாலிபரை கொலை செய்ய ரூ.8 லட்சம் பணம் வாங்கி 6 பேரும் பங்கு போட்டுக் கொண்டதாக பிடிபட்ட பெண் பரபரப்பு தகவல் வெளியிட்டார்.
திருவொற்றியூர் வாலிபர் விக்கி கொலை தொடர்பாக போலீசில் பிடிபட்ட எஸ்தர்ராணி (35) பல திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இவர் சதாசிவம் கம்பெனியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஆவார். இவருக்கு திருமணமாகி கணவர் கணேசனுடன் புது வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார்.
தனது கள்ளக்காதலியாக இருந்த சுஜாதாவை விக்கி அபகரித்துக் கொண்டதால் சதாசிவம் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நேரத்தில் முன்னாள் ஊழியரான எஸ்தர்ராணியை சந்தித்து கூறி வருத்தப்பட்டார்.
அப்போது சதாசிவம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விக்கியை தீர்த்துக் கட்ட வேண்டும், நீ உதவி செய் என்று எஸ்தர்ராணியிடம் கேட்டுக் கொண்டார்.
                                                                                                               மேலும், . .. 

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட இந்திய குடிமக்களை திரும்பவும் ஏற்றுக்கொள்ள தயார் - உள்துறை அமைச்சகம்
புதுடெல்லி, 27-07-2014,
ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட இந்திய குடிமக்களை திரும்பவும் ஏற்றுக்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகள் 157 பேர் அடைக்கலம் கேட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணம் செய்த படகின் என்ஜின் கடந்த மாதம் 29–ந் தேதி கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்றது. அவர்கள் உதவி கேட்டு நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை மீட்டு விசாரணை நடத்தியது.
                                                                                                                 மேலும், . . . 

சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, 27-07-2014,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில வாரங்களில் மூட்டைக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. காரணமின்றி செய்யப்பட்டுள்ள விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.180 ஆக இருந்தது. ஆனால், அடுத்த 6 மாதங்களில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 100 ரூபாய் அதிகரித்து ரூ.280 ஆக உயர்ந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் 330 ரூபாயாக அதிகரித்த சிமெண்டின் விலை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மீண்டும் குறைந்தது.
                                                                                                         மேலும், . . . .  

‘பொதுமக்கள் பீதி அடையவேண்டாம்’ விரிசலால் கபினி அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை நீர்ப்பாசனத் துறை அதிகாரி பேட்டி
மைசூர், 27-07-2014,
கபினி அணையில் ஏற்பட்டுள்ள விரிசலால் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கபினி அணை
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் பீச்சனஹள்ளி மற்றும் பீதரஹள்ளி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது கபினி அணை. கர்நாடக மாநில முக்கிய அணைகளில் இதுவும் ஒன்று. இந்த அணை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தான் கபினி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது. இதனால் வயநாடு பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே அணைக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், மண்டியா, குடகு, சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் உயிர்நாடி ஆகும். மேலும் இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், பணமரம் மற்றும் மானந்தவாடி ஆறுகளில் கலந்து,
                                                                                                                    மேலும், . . . . 

No comments:

Post a Comment