Saturday 19 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: உலக நாடுகளின் உதவியை நாடும் மலேசியா
கோலாலம்பூர், ஜூலை, 19-07-2014,
உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் எம்.எச்-17 சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர். இதையடுத்து அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாய் தலைமையில் மருத்துவக் குழு மற்றும் விசாரணைக்குழு இன்று உக்ரைன் செல்கிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாய் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடம் பாதுகாப்பற்ற பகுதி. விமானம் விழுந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளேன். அங்கு எங்களை செல்ல அனுமதிக்காவிட்டால் அது மனிதாபிமானமற்ற செயல்.
விமானத்தின் கருப்பு பெட்டி குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்.
                                                                                                          மேலும், . . .

ஈரோடு: பேக்கரி உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


ஈரோடு, ஜூலை, 19-07-2014,
ஈரோடு ரெங்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 43). இவர் ரெங்கம் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை எழுந்து பேக்கரியை திறக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ரெங்கம்பாளையம் ஜோசப் ஆஸ்பத்திரி எதிர்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் பிரேம்நாத் பிணமாக மீட்கப்பட்டார்.
                                                                                                       மேலும், . . .

தி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் நிரந்தர நீக்கம்: அன்பழகன் அறிக்கை

சென்னை, ஜூலை, 19-07-2014,
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தலைமைக் கழகத்தின் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படாமல், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்து விட்டதாக புகார் கூறப்பட்ட கழக முன்னணியினரைப் பற்றியும், அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்தும் விசாரித்த அளவில், அந்தக் குற்றச்சாட்டுகளில் முழு உண்மையில்லை என்றும், புகார்கள் உள்ளூர் கோபதாபங்களையொட்டி கொடுக்கப்பட்டவை என்றும், தாங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீற வில்லை என்றும், கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கழகத்திற்காக பல இன்னல்களையேற்று பணியாற்றி வருபவர்கள் என்றும், அதையும் மீறி தங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தியிருந்தால், தலைமைக் கழகம் தங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், கழகத் தலைவர், கலைஞர் தங்களின் கடந்த கால பணிகளை எண்ணிப் பார்த்து மீண்டும் கழகத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்றும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் விளக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களின் விளக்கங்களை யெல்லாம் பார்த்த பிறகு, அவர்கள் தெரிவித்துள்ள பல கருத்துகள் அடியோடு புறக்கணிக்கப்பட முடியாத ஒரு நிலையில் அந்தக் கழகத் தோழர்கள் இருப்பது தெளிவாகிறது.
                                                                                                                                மேலும், . . .

பெங்களூரில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பள்ளியில் பெற்றோர் 3–வது நாளாக முற்றுகை

பெங்களூர், ஜூலை, 19-07-2014,
பெங்களூரில் எலட் விப்ஜியார் என்ற தனியார் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 2–ம் வகுப்பு 6 வயது சிறுமி கடந்த வாரம் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
அன்று சிறுமி வகுப்பறையில் குறும்புத்தனமாக நடந்து கொண்டதால் வகுப்பறையை விட்டு வெளியேறச் சொல்லி ஆசிரியர் தண்டனை கொடுத்தார். அருகில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் தனியாக அடைத்து வைக்கப்பட்டார்.
அரை மணி நேரம் கழித்து சிறுமி மீண்டும் வகுப்பறைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவள் சோர்வுடன் காணப்பட்டார். சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலியால் துடித்தார்.
                                                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment