Thursday 10 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-07-2014) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, ஜூலை 10-07-2014,
தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிக்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. காலை சட்டசபை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பூவராகன், அ.மலர்மன்னன், ரா.உமாநாத், ராம.நாராயணன், எஸ்.ராஜு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய மந்திரி கோபிநாத் பாண்டுரங் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், அலமாதி கிராமத்தில் சேமிப்பு கிடங்கில் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியவை குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
                                                                                                                 மேலும், . . .

பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
புது தில்லி, ஜூலை 10-07-2014,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..
5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.
வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.
விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.
                                                                                                                      மேலும், . . .

வளர்ச்சியை அளிக்கும்: மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வகை செய்யும் மத்திய பட்ஜெட் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வகை செய்யும். அடுத்த 2,3 வருடங்களுக்கு வளர்ச்சியை அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தெளிவான திட்டம் பட்ஜெட்டில் உள்ளது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜவுளி மண்டலம் அமைக்கும் முடிவுக்கும்,பொன்னேரி உள்பட 100 நவீன நகரங்கள் உருவாக்குவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரவேற்பை தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த பிரெய்லி அச்சகங்களில் ஒன்றாவது தமிழகத்தில் அமைய வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை - சோனியா காந்தி கருத்து
மத்திய பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
                                                                                                                  மேலும், . . .

தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய பட்ஜெட்: வைகோ வரவேற்பு


சென்னை, ஜூலை 10-07-2014,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பத்து ஆண்டுக்கால காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் வீழ்ந்து கிடந்த இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்டு உயர்த்துகின்ற வகையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த, இந்திய அரசின் பொது வரவு, செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை மதிக்கும் அரசாகத் திகழும் என்பதற்கு அடையாளமாக, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்காக சென்னையில் அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்ப மருத்துவமனை, சூரிய மின்சக்தித் திட்டம், ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மருத்துவக் கல்லூரியில் காசநோய், பல் மருத்துவ சிகிச்சைகள் தொடங்குதல் போன்ற அறிவிப்புகளைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
                                                                                                         மேலும், . . .

No comments:

Post a Comment