Wednesday 9 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-07-2014) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

நாடே உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது எம்.பி.,களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
புதுடில்லி, ஜூலை, 09-07-2014,
லோக்சபாவில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி,க்களின் அடாவடியான செயல்களால் அதிருப்தியடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'ஒட்டு மொத்த நாடே உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ளுங்கள்' என்று எம்.பி.களுக்கு அறிவுரை வழங்கினார்.
லோக்சபாவில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மேற்கு வங்கத்திற்கு ஒரு திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை என கூறி திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
                                                                                                                        மேலும், . . .

குற்றவாளிகள் விடுதலை விவகாரம் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை, 09-07-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாழன் உள்பட 3 பேரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது. தண்டனை காலத்தைப் பொறுத்து அவர்களை மாநில அரசு நினைத்தால் விடுதலை செய்யலாம் என்றும் கூறியிருந்தது.
இதனால் தமிழக அரசு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
                                                                                                     மேலும், . . . 

கடற்கரையில் காதல் விளையாட்டு: எல்லை மீறும் காதலர்களுக்கு கடிவாளம்
சென்னை, ஜூலை, 09-07-2014,
பெசன்ட்நகர் கடற்கரையில் வைத்து நேற்று முன் தினம் இரவு காதலன் ஏழுமலையால் கழுத்தை நெரித்து நித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து விட்டு ஏமாற்றிய காரணத்துக்காக நித்யா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்து தனது காதல் வெறியை தீர்த்துக் கொண்டதாக ஏழுமலை அளித்திருக்கும் திடுக்கிடும் வாக்கு மூலத்தால் போலீசாரும் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.
பெசன்ட்நகர் கடற்கரையில் ஆள்நடமாட்டம் இருந்த போதே நித்யாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறியிருக்கும் ஏழுமலை, இதனை வழக்கமான காதல் விளையாட்டு என நினைத்து யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். இது போலீசுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுபோன்று மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட தொடங்கியுள்ளனர்.
                                                                                                     மேலும், . . .

பாரதீய ஜனதா தலைவராக அமித்ஷா தேர்வு
புதுடெல்லி, ஜூலை, 09-07-2014,
பாரதீய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி காலியாக இருந்தது. இதற்கு அமித்ஷா பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா. ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது.
                                                                                                       மேலும், . . . 

No comments:

Post a Comment