Wednesday 2 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

சுனந்தா மரண சர்ச்சை: விசாரணையை விரைவில் முடிக்க சசி தரூர் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை. 02-07-2014,
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்தார். அதிக டோஸ் மாத்திரைகள் சாப்பிட்டதால் இறந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.
                                                                                                  மேலும், . . . 

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு வைகோ அறிக்கை
சென்னை, ஜூலை. 02-07-2014,
பன்னாட்டுச்சட்ட விதிகளின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு என்று வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு பிரச்சினை
கச்சத்தீவு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு,
                                                                                                         மேலும், . . . 

10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று 87 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த 'சூப்பர் மம்மி'

லண்டன், ஜூலை. 02-07-2014,
இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்தவர் ஜேசன் (வயது 41) இவரது மனைவி தோனியா (வயது 40). இந்த தம்பதியினருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. தோனியா 10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று அவர்களை பாதுகாப்பாக வளர்த்துவரும் 'சூப்பர் மம்மி'யாக திகழ்கிறார். தோனியா சுமார் 7 வருடங்களுக்கு மேலாக (87 மாதங்கள்) கர்ப்பமாகவே இருந்துள்ளார். தோனியாவின் முதல் குழந்தைக்கு வயது 12 அவருடையை, கடைசி குழந்தைக்கு வயது 2 ஆகும். என்னுடைய 9 குழந்தைகளையும் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ச்சி அடையும் மற்றவர்கள் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் சமையல் அறையில் சுறுசுறுப்பாக வேலை செய்து எனது குழந்தைகளை கவனித்து வருகின்றேன் என்று தோனியா கூறியுள்ளார்.
தோனியாவை பிறந்தநாள் விழாவில் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன் அவரை கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
                                                                                                      மேலும், . . . .

ஷாஜஹானின் கோடைக்கால அரண்மனை கண்டுபிடிப்பு

ஆக்ரா, ஜூலை. 02-07-2014,
இந்தியத் தொல்லியல்துறை சமீபத்தில் ஆக்ராவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் தாஜ்மஹாலுக்கு எதிரே ஒரு கோடைக்கால அரண்மனையின் சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளது. காற்றோட்டம் நிரம்பிய பெரிய மண்டபம் போன்ற நூற்றாண்டுகள் கடந்த இந்த அமைப்பானது தாஜ்மஹாலுக்கு எதிரே உள்ள முகலாயர் காலத்திய தோட்டமான மெஹ்தாப் பாகில் அமைந்துள்ளது.
உருது மொழியில் நிலவொளி என்று பொருள்படும் இந்தத் தோட்டம் ஷாஜஹானுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.
                                                                                                         மேலும், . . . 

No comments:

Post a Comment