Thursday 3 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

கட்டிட விபத்தில் 58 பேர் பலி இறுதி கட்ட மீட்பு பணி நாளை மாலைக்குள் முடியும்

சென்னை, ஜூலை, 03-07-2014,
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.
இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் குழுவினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவீன கருவிகள், மோப்ப நாய்கள், கிரேன்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) 6–வது நாளாக மீட்புப் பணிகள் நடந்தது. நேற்றிரவு வரை மொத்தம் 77 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டவர்கள். 50 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
நேற்று மட்டும் 15 உடல்கள் மீட்கப்பட்டது. நேற்று யாராவது உயிருடன் இருப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு நிலவியது. ஆனால் நேற்று ஒருவர் கூட உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை.
                                                                                                   மேலும், . . . .

பாலிவுட் நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றம்
மும்பை, ஜூலை. 03-07-2014,
பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த வருடம் ஜூன் 3-ந் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அப்போது அவர் தனது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) கடைசியாக பேசியது தெரியவந்தது.
                                                                                                      மேலும், . . . 

படம் ரிலீசுக்கு முன்னரே கோடிகளை அள்ளும் திட்டத்தில் ஷாருக்கான்
மும்பை, ஜூலை. 03-07-2014,
ரெட் சில்லிஸ் புரொடக்சன்ஸ் சார்பாக கௌரிகான் தயாரிப்பில் பராகான் இயக்கும் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளிவரவிருக்கும் இப்படம் நடிகர் ஷாருக்கானின் சொந்தப்படம் ஆகும். பொதுவாக புதிய திரைப்படத்திற்கான விளம்பர யுத்தியாக அதில் நடித்த நடிகர், நடிகைகளின் பேட்டிகள், புகைப்படக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று திட்டமிடப்படும்போது நடிகர் ஷாருக்கான் இப்படத்திற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் அவருடன் நடித்துள்ள தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், சோனு சூட், பொமன் இரானி போன்றோரை
                                                                                                         மேலும், . . . 

கட்டிட விபத்து பற்றி ஆராய நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன்: ஜெயலலிதா
சென்னை, ஜூலை. 03-07-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மெளலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல் களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தர விட்டேன்.
மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு,
                                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment