Tuesday 8 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

இந்தியாவின் முதல் 'புல்லட்' ரெயில்; மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு
புதுடில்லி, 08-07-2014,
பல்வேறு எதிர்பார்ப்புகள் இடையே இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கலானது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நண்பகல் 12 மணியளில் லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை வாசித்தார். இன்றைய பட்ஜெட்டில் ரயில் பாதுகாப்பு , சுகாதாரம் , நவீனத்திற்கு முக்கியத்துவம் என பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்,5 ஆண்டுகளில் பேப்பர் இல்லாத ரயில்வே உருவாக்கப்படும் என்றும், ஏ மற்றும் ஏ.-1 ரக ஸ்டேஷன்களில் வை-பை நெட் வசதி கிடைக்கப்பெறும் என்றும் , அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் வழங்கும் தானியங்கி கருவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ரயில்வேயில் தனியார் முதலீடு தொடர்பாக மத்திய அமைச்சக அனுமதியை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மும்பை- ஆமதாபாத் இடையே புல்லட் ரயில், ஜெய்ப்பூர்- மதுரை இடையே குளிர்சாதன ரயில் இயக்கப்படும். வேளாங்கண்ணி, மேல்மருவத்தூர் இடையே சிறப்பு ரயில்கள்,ராமேஸ்வரம், வாரணாசி உள்ளிட்டபுனித தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டார். புதிய ரயில்வே கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்பதன் மூலம் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் பேசுகையில்; நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே துறையை என்னிடம் ஒப்படைத்துள்ள பிரதமர்மோடிக்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவரது எதிர்பார்ப்பை நான் முழுவதும் நிறைவேற்றுவேன். மத்திய அரசுபொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய ரயில்வே கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்திய பொருளாதாரத்தின் ஆதாரமாக விளங்குகிறது.
இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு ரயில்வே நிர்வாகம் அழைத்து செல்வதில் முக்கியத்துவம் பெறுகிறது.
                                                                                                     மேலும், . . . 

நிதியை அதிகரிக்கும் பொறுப்புள்ள, தைரியமான ரெயில்வே பட்ஜெட் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கருத்து
சென்னை, 08-07-2014,
நிதியை அதிகரிக்கும் பொறுப்புள்ள, தைரியமான ரெயில்வே பட்ஜெட் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
2014-15 ஆம் ஆண்டுக்கான மோடி அரசின் முதல் ரெயில்வே பட்ஜெட்டை இன்று சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
                                                                                                 மேலும், . . . 

சங்கரராமன் கொலைவழக்கு சங்கராச்சாரியார் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் புதுவை அரசு உத்தரவு
புதுச்சேரி, 08-07-2014,
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் தனது அலுவலகத்தில் இருந்தபோது கடந்த 3.9.2004 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயந்திரர், விஜயேந்திரர், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு உள்ளிட்ட 25 நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கராச்சாரியார்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார்.
                                                                                                       மேலும், . . . 

உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு
படான், 08-07-2014,
உத்தரபிதேச மாநிலம் படான் மாவட்டம் சிங்காவுலியில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமிகள் அங்குள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் சிறுமிகளை கேலி செய்துள்ளனர்.
                                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment