Tuesday 4 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச், 05-03-2014,
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1–ந்தேதியுடன் முடிவடைகிறது.
பாராளுமன்ற தேர்தல்
எனவே மே 31–ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது.
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
                                                                                                          மேலும், . . . 

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னை, மார்ச், 05-03-2014,
கச்சத்தீவு பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மீனவர்கள் பிரச்சினை
இன்றைய சூழ்நிலையில், நம் முன் தலையாய பிரச்சினையாக விளங்குவது தமிழக மீனவர்கள் பிரச்சினை. இலங்கை கடற்படையின் தொடர் துன்புறுத்தல் சிறைபிடிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனது தலைமையிலான அரசின் துரித நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்களை ஒருபுறம் இலங்கை அரசு விடுவித்து வருகிறது. மறுபுறம் புதிதாக மீனவர்களை சிறை பிடிக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால், வலுவான இந்திய அரசு மத்தியில் அமரவேண்டும்.
                                                                                                                               மேலும், . . . 

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டி? ஜெயலலிதா பேச்சில் வெட்டவெளிச்சம்

சென்னை, மார்ச், 05-03-2014,
காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி களை, அ.தி.மு.க., கழற்றிவிட முடிவு செய்திருப்பது உறுதியானது.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நேற்று, இரண்டாவது நாளாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து, சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். காஞ்சிபுரத்தில், அவர் பேசும்போது, ''மத்தியில், நடைபெறும், ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அந்த ஆட்சி, தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக, அமைய வேண்டும். அப்போது தான், தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில், நீங்கள் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.
                                                                                          மேலும், .. . .

No comments:

Post a Comment