Wednesday 5 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

ஏப்ரல் மாதம் 7–ந் தேதி முதல் மே மாதம் 12–ந் தேதி வரை பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் தமிழகத்தில் ஏப்.24–ந் தேதி ஓட்டுப்பதிவு மனுதாக்கல் 29–ந் தேதி தொடங்குகிறது
புதுடெல்லி, மார்ச், 06-03-2014,
16-வது பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
9 கட்ட தேர்தல்
தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். மற்ற இரு தேர்தல் கமிஷனர்களான எச்.எஸ்.பிரம்மா, எஸ்.என்.ஏ.ஜைதி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
அதன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி, மே மாதம் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த தேர்தல்தான் மிக அதிகமாக 9 கட்டங்களாக நடைபெறுகிறது.
                                                                                               மேலும், . . .  

ராயப்பேட்டை கொள்ளையில் துப்பு துலங்கியது 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

சென்னை, மார்ச், 06-03-2014,
சென்னை ராயப்பேட்டையில், அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக இருந்த பெண்களிடம், கொள்ளை அடித்த வழக்கில், கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி, கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது பற்றி, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது முன்னிலையில், நடந்த சம்பவம் பற்றி, மைலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:–
தொழில் அதிபர் வீட்டில்....
சென்னை ராயப்பேட்டை, பாலாஜி நகரில் உள்ள அஜய் அடுக்குமாடி குடியிருப்பில், தொழில் அதிபர் கலீலூர்ரஹ்மான் என்பவர் வசிக்கிறார். அவர் கத்தார் நாட்டில் தங்கி இருந்து தொழில் செய்கிறார். அவரது வீட்டில் அவரது மாமியார் மசூர்சுல்தானா (வயது 65), அவரது மகள் கல்லூரி மாணவி இர்பாத் பாத்திமா மற்றும் வேலைக்கார பெண் ஆகியோர் தனியாக தங்கி உள்ளனர்.
                                                                                                                 மேலும், . . . 

வெள்ளிங்கிரி மலையில் மாயமான சினிமா இயக்குனரை கண்டுபிடிக்க 70 பேர் கொண்ட குழு அமைப்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை தீவிரம்

கோவை, மார்ச், 06-03-2014,
வெள்ளிங்கிரி மலையில் மாயமான சினிமா இயக்குனரை கண்டுபிடிக்க 70 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சினிமா கலை இயக்குனர்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோ மிர்தாத் (வயது 35). இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் திரைப்பட கலை இயக்குனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் கடந்த 27–ந் தேதி இரவு கோவை மாவட்டம் பூண்டி வெள்ளிங்கிரி மலையில் உள்ள 7–வது மலைக்கு பக்தர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் மலையில் இருந்து கீழே இறங்கினார். 6–வது மலையில் வந்தபோது வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார். உடனே அவர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் வழிதவறி விட்டதாக தெரிவித்தார்.
                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment