Monday 10 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-03-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலுக்கு அணிகள் தயார் தமிழகத்தில் 5 முனை போட்டி உறுதி
புதுடெல்லி, மார்ச், 11-03-2014,
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்தமாதம் (ஏப்ரல்) 24–ந்தேதி நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க–தி.மு.க.
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. இந்த முறை தனித்து சந்திக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
                                                                                                                     மேலும், . . .

கருணாநிதி வெளியிட்டார் தமிழகத்தில் 35 தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
சென்னை, மார்ச், 11-03-2014,
தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும், 35 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.
வடசென்னையில் ஆர்.கிரிராஜனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், தென்சென்னையில் டி.கே.எஸ்.இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தனித்து எதிர்கொள்ளும் அ.தி.மு.க., தமிழகம் – புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
                                                                                            மேலும், . . . . 

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் மர்மம் நீடிப்பு உடைந்த பாகங்கள் எதுவும் தென்படாததால் மீட்புக்குழுவினர் திணறல்
கோலாலம்பூர், மார்ச், 11-03-2014,
239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காததால், விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
239 பயணிகளுடன் மாயம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய விமானம் ஒன்று கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் புறப்பட்டது. அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
அது தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே கடலில் நொறுங்கி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
                                                                                                  மேலும், . . . 

No comments:

Post a Comment