Saturday 15 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்
சென்னை, மார்ச், 16-03-2014,
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ.க. வலுவான அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தன.
தொகுதி பங்கீட்டில் சிக்கல்
பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தது. அந்த தொகுதிகளில் சிலவற்றை தே.மு.தி.க கேட்டதாலும், இதர சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் இடையே பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீடித்தது.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு காண முடியவில்லை.
வேட்பாளர் அறிவிப்பு
இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, திருவள்ளூர், வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார்.
                                                                                                                       மேலும், . . . 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும் தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

தூத்துக்குடி, மார்ச், 16-03-2014,
“சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை நாடாளுமன்றத்தில் வெற்றி பெறச் செய்த கருணாநிதி, தற்போது அதை தடை செய்ய பாடுபடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் ‘அந்தர் பல்டி‘ அடித்து இருக்கிறார். மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் வாய்ப்பு நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் மூலம் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஒழித்துக் கட்டப்படும்“ என்று தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.
இதற்காக தூத்துக்குடி கதிர்வேல் நகருக்கு மாலை 3 மணி அளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்குள்ள திடலில் தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்து இருந்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.சண்முகநாதன், சசிகலா புஷ்பா எம்.பி. சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பங்கள், முளைப்பாரி ஏந்தி வரவேற்றனர்.
பிரசார மேடையில் நின்றபடி, முதல்–அமைச்சர் ஜெயலிலதா பேசியதாவது:–
                                                                                                                     மேலும், . . . . 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடி போட்டி பா.ஜனதா கட்சியின் 4–வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
புதுடெல்லி, மார்ச், 16-03-2014,
பா.ஜனதா கட்சியின் 4–வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
மத்திய தேர்தல் குழு கூட்டம்
பா.ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தனர். இரவு 11 மணிக்கு மேலும் இந்த கூட்டம் நீடித்தது. உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் அரியானா உள்பட 12 மாநிலங்களின் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி இந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்தும், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்தும் இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

                                                                                                                                      மேலும், . . . 

No comments:

Post a Comment