Wednesday 19 March 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-03-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


தமிழக நலன்களை விட்டு தந்தவர் கருணாநிதி: முதல்வர்

சென்னை, மார்ச்.20 -
மக்களவை தேர்தலையொட்டி தென்காசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சங்கரன் கோவிலில் பிரசாரம் மேற்கொண்டார்.
சங்கரன்கோவில், ஏஞ்சல் பள்ளி மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்து, அங்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் கடல் அலைபோல் திரண்டிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, % தன்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது பேசியதாவது:_
2011 -ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ; அதைவிட மகத்தான வெற்றியை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைப்பதற்காகவே இங்கே நான் வந்திருக்கிறேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
                                                                                                                      மேலும், . . .

மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா
புதுடெல்லி, மார்ச், 20-03-2014,
5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம், கடந்த 8-ந்தேதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலை நோக்கி பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மலேசிய விமானத்தில் சீனாவை சேர்ந்த 150 பேர் பயணம் செய்தனர்.
எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா மும்முரமாக இறங்கியுள்ளது. விமானத்தை தேடும் வேட்டை தற்போது இந்திய கடல்பகுதிகளை நோக்கி திரும்பியுள்ள நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தேடும் பணிக்காக, அதிநவீன மீட்புக்கப்பல் உள்ளிட்ட 4 போர்க்கப்பல்களை இந்திய கடல்பகுதியில் நுழைய அனுமதிக்குமாறு இந்தியாவிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.
                                                                                மேலும், . . .

தேர்தலின்போது வாகன சோதனை போன்ற பணிகளில் ஈடுபட துணை ராணுவத்தினர் 3,500 பேர் வருகை தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தீவிர நடவடிக்கை
சென்னை, மார்ச், 20-03-2014,
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 24-ந்தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்னும் தொடங்கப்படவில்லை. என்றாலும் வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் கமிஷன் தீவர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தேர்தலை முன்னிட்டு பணம், பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தீவிர வாகன சோதனைகளும் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நேரடி மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஐ.ஜி.சேஷசாயி தலைமையில் தினமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
                                                                                                    மேலும், . . . 

No comments:

Post a Comment