Sunday 23 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு ‘‘நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது’’
புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2014,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்
தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
                                                                                         மேலும், . . . 

‘ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள்’ பா.ஜனதா மீது ராகுல் காந்தி தாக்கு
டேராடூன், பிப்ரவரி, 24-02-2014,
ஆட்சியை பிடிப்பதற்காக எதையும் செய்வார்கள் என பா.ஜனதா மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரத்த அரசியல்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜனதா ரத்த அரசியல் நடத்த பயிற்சி எடுத்து வருகிறது. அவர்களுக்கு தேவை ஆட்சி அதிகாரம் மட்டுமே. அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆட்சியை பிடிப்பதற்கு தேவைப்பட்டால் மக்களிடையே பிரிவினையை தூண்டக்கூட அவர்கள் தயங்க மாட்டார்கள்.
                                                                                                    மேலும், . . .

‘காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது’ நரேந்திர மோடி குற்றச்சாட்டு
லூதியானா, பிப்ரவரி, 24-02-2014,
காங்கிரஸ் கட்சி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
வெற்றி பேரணி
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு, பா.ஜனதா கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று பா.ஜனதா சார்பில் வெற்றி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                      மேலும், . . 

No comments:

Post a Comment