Thursday 27 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-02-2014) காலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் நளினி, ராபர்ட் பயாஸ் உள்பட 4 பேரை விடுதலை செய்ய தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி, பிப்ரவரி, 28-02-2014,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 18-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு
இதன் அடிப்படையில், அவர்கள் 3 பேரையும் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய 19-ந்தேதி தீர்மானித்த தமிழக அரசு, அதுபற்றி 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
                                                                                                            மேலும், . . . 
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் வர்த்தகர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேச்சு
புதுடெல்லி, பிப்ரவரி, 28-02-2014,
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் என்று வர்த்தகர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசினார்.
வர்த்தகர்கள் மத்தியில் மோடி
தலைநகர் டெல்லியில் அனைத்திந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் (கெயிட்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று பங்கேற்று, வர்த்தகர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உலகளாவிய சவால்களைக்கண்டு வர்த்தக சமூகத்தினர் ஓடக்கூடாது. ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றால், நாம் ஒழிந்து விடுவோம் என்று வர்த்தகர்கள் கருதக்கூடாது. சவால்களை எதிர்கொள்ளத்தக்க அளவில் நீங்கள் (வர்த்தகர்கள்) உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                       மேலும், . . 


பா.ஜ.க. கூட்டணியில் கூடுதல் இடம் கேட்டு போராடும் பா.ம.க. 2 நாட்களில் சுமுக உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
சென்னை, பிப்ரவரி, 28-02-2014,
பா.ஜ.க. கூட்டணியில், கூடுதல் இடம் கேட்டு பா.ம.க. இன்னும் போராடி வருகிறது. இருந்தாலும், 2 நாட்களில் சுமுக உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தே.மு.தி.க. உறுதி
தமிழகத்தில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக்கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. நரேந்திரமோடியின் தூதுக்குழு கடந்த 2 தினங்களுக்கு முன்பு எல்.கே.சுதீஷை சந்தித்து பேசிய பிறகு தே.மு.தி.க.வும் அக்கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
                                                                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment