Monday 3 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-02-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டம்
புதுடெல்லி, பிப்ரவரி, 04-02-2014,
நடப்பு பாராளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) கூடுகிறது. இதில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கம்யூனிஸ்டுகள் அடங்கிய புதிய கூட்டணி புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
பாராளுமன்றம் கூடுகிறது
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை பாராளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத ஒரு அணியும் உருவாகி உள்ளது.
இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் உள்பட 14 கட்சிகள் இதில் இணைந்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடப்பு 15–வது பாராளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை (புதன் கிழமை) கூடுகிறது. நாளை தொடங்கி 21–ந்தேதி வரை 5 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
                                                                                                             மேலும், . . . .

தமிழகத்தில் மின்சார உற்பத்திக்காக புதிய திட்டங்கள் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படும் சட்டசபையில் ஜெயலலிதா உறுதி

சென்னை, பிப்ரவரி, 04-02-2014,
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சாதனை
மின்சாரத்தில் அரசு எடுத்த பகீரத முயற்சிகளால், இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. 1991–96 வரையிலான எனது முதல் ஆட்சி காலத்தில், 1,300 மெகாவாட் மின் நிறுவு திறன், 2001–06 வரையிலான எனது இரண்டாவது ஆட்சி காலத்தில், 2,500 மெகாவாட் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது.
                                                                                               மேலும், . . . . 

மயான நிலம் ஒதுக்கக் கோரி தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

சென்னை, பிப்ரவரி, 04-02-2014,
அரசு எடுத்துக்கொண்ட மயான நிலத்துக்கு மாற்று நிலம் வழங்கக் கோரி, அனைத்து முஸ்லிம்கள் சார்பில், சந்தூக்கு (இறந்தவர்களின் உடலை தூக்கி வருதல்) தூக்கிச் செல்லும் போராட்டம் திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவல்துறையின் தடையை மீறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் (சங்கர்நகர்) ஷாதிகான் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடி நிலம் கடந்த 2008-ல் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்த மையவாடி நிலத்தில்தான் இறந்தவர்களின் நிலத்தை முஸ்லிம்கள் அடக்கம் செய்து வந்தனர்.
                                                                            மேலும், . . . . . .

No comments:

Post a Comment