Friday 21 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2014) காலை, IST- 08.00 மணி, நிலவரப்படி,

 இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது 15–வது பாராளுமன்றம் முடிவுக்கு வந்தது கடைசி நாளில் நெகிழ்ச்சியான காட்சிகள்
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2014,
15–வது பாராளுமன்றம் நேற்று முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் நெகிழ்ச்சியான காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
பட்ஜெட் நிறைவேறியது
நடப்பு 15–வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தின் நீட்டிப்புத் தொடராக அமைந்தது. கடந்த 5–ந் தேதி இந்த நீட்டிப்பு தொடர் தொடங்கியது. இடைக்கால ரெயில்வே பட்ஜெட், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.
கடைசி நாளான நேற்று இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது.
                                                                                                      மேலும், . . .
பா.ஜனதாவின் தேர்தல் நிதி, பிரசார செலவுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் நரேந்திரமோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2014,
பா.ஜனதா கட்சியின் தேர்தல் நிதி மற்றும் தேர்தல் பிரசார செலவு விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று, அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ரிலையன்ஸ் நிறுவன கியாஸ் விவகாரத்தில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறார்.
கியாஸ் விலையை குறைப்பீர்களா?
அது குறித்து நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜனதா கட்சியின் தேர்தல் செலவுகளையும், கட்சிக்கு யார்–யாரெல்லாம் நிதி கொடுத்தனர் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கியாஸ் விலையை குறைக்கத் தயாரா? என்றும், கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
                                                                             மேலும், . . . 

இந்திய-பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு ரூ.5,081 கோடிக்கு ஒப்பந்தங்கள் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்து
சென்னை, பிப்ரவரி, 22-02-2014,
தமிழ்நாட்டில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், 5 ஆயிரத்து 81 கோடி ரூபாய் மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பும் பெறுவார்கள்.
விழாவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
                                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment