Saturday 8 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2014) மாலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

வரலாறே தெரியாதவர் மோடி குஜராத் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு
அகமதாபாத், பிப்ரவரி, 08-
குஜராத் மாநிலம் பர்டோலியில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
வரலாறே தெரியாதவர்கள் குஜராத்தை ஆட்சி செய்கிறார்கள். காந்தி, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களைப் பற்றி குஜராத் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விஷத்தன்மை கொண்ட அமைப்பு என்று வல்லபாய் பட்டேல் கூறியிருந்தார். ஆனால், பட்டேலைப் பற்றி எதுவும் தெரியாத மோடி இப்போது அவரது சிலையை அமைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தமே காந்தி கொலைக்கு காரணம்.

                                                                                                    மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவானால் ஆதரித்து பிரசாரம் செய்வோம்: சீமான் பேட்டி
கோபி, பிப்ரவரி, 08-
கோபியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாருக்கு நினைவு பொதுகூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மையை முன்னிலைப்படுத்தி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் தொழிலை செய்தால் கேவலம் என்ற நிலையை மாற்றி இளைஞர்களும் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
மண்ணை நேசிக்கும் இளைஞர்களுக்குதான் திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்.
                                                                                                  மேலும், . . . .

வாஸ்துபடி மணிப்பூர் முன்னேறினால் நாடு முன்னேறும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை - மோடி கடும் தாக்கு
இம்பால், பிப்ரவரி, 08-
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:–
வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்று வந்திருப்பதன் மூலம் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். மணிப்பூர் மாநில மக்களுக்கும், இந்த மண்ணுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                               மேலும், . . 

No comments:

Post a Comment