Thursday 20 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

பா.ஜ.க-தே.மு.தி.க. இடையே நேரடி பேச்சு வார்த்தை தொடங்கியது
சென்னை, பிப்ரவரி, 21-02-2014,
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்குநாடு தேசிய கட்சி ஆகியவை இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., ஆந்திரா மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில், ம.தி.மு.க. வுக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் கொடுக்க பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், அந்தக் கட்சி கூடுதலாக 4 தொகுதிகளை கேட்கிறது. இதனால், பா.ம.க.வுடனான பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.
                                                                                                           மேலும், . . .

ராஜீவ் கொலை கைதிகளுக்கு தண்டனை ரத்து காங்கிரஸ் பரபரப்பு துண்டு பிரசுரம்
சென்னை, பிப்ரவரி, 21-02-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் ‘சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்’ என்ற தலைப்பில் 4 பக்க துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா? தமிழர்களே சிந்திப்பீர் என்ற கேள்வியுடன் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி, குண்டு வெடிப்பில் பலியான தியாகி லீக் முனுசாமி, சந்தாணிபேகம், போலீஸ் சூப்பிரண்டு டி.கே.எஸ். முகமது இக்பால், இன்ஸ் பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப் ஆகியோரது படங்களையும் பிரசுரித்துள்ளனர்.
அந்த துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:–
                                                                                                        மேலும், . . . 

பார்லிமெண்டில் நிலுவையில் 81 மசோதாக்கள் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுமா?
புதுடில்லி, பிப்ரவரி, 21-02-2014,
15 வது லோக்சபாவின் கடைசிக் கூட்டத் தொடரும், பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடருமான தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் பார்லி.,யில் தாக்கல் செய்யப்படாமல் இன்னும் 81 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
கடைசி கூட்டத் தொடர்
தற்போது நடைபெற்று வரும் 15வது லோக்சபாவின் செயல்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. புதிய லோக்சபாவிற்கான தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 5ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த கூட்டத் தொடர் முடிய உள்ளது.
                                                                                                              மேலும், . . . 

No comments:

Post a Comment