Sunday 9 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2014) காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,

சென்னையில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி பரிசீலனை

சென்னை, பிப்ரவரி, 10-02-2014,
பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி குறித்து இந்த மாதம் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆலோசனை
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வி.சி.சம்பத், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அவர் சென்னை வந்தார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
                                                                                   மேலும், . . .

காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - ஜெயலலிதா பேச்சு

மதுரை, பிப்ரவரி, 10-02-2014,
முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:–
தேவரின் பொன்மொழிகள்
‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டவர், தேவர் திருமகனார். ‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’ என்று முழங்கியவர், அவர். அவரது பொன்மொழிகள் இக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன.
காங்கிரஸ் அல்லாத ஆட்சி
ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை அவருடைய முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன் தேவர் திருமகனாரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது என்று தெரிவித்து அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு அவர் பகல் 2 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் தளம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார்.
                                                                                                    மேலும், . . . . 

‘எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை’ அத்வானி சொல்கிறார்
புதுடெல்லி, பிப்ரவரி, 10-02-2014,
எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறி இருக்கிறார்.
பிரதமர் கனவு தகர்ந்தது
முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுவதால் மீண்டும் பிரதமர் கனவில் இருந்து வந்தார், அத்வானி. ஆனால், அவருடைய எதிர்ப்பையும் மீறி குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்தது.
                                                                                         மேலும், . . . 

No comments:

Post a Comment