Thursday 6 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2014) நண்பகல்,IST- 01.00 மணி,நிலவரப்படி,

கம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை
சென்னை, பிப்ரவரி, 06–02-2014,
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.
அ.தி.மு.க. சார்பில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ள தொகுதி பங்கீட்டு குழுவினரான ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்டு சார்பில் அதன் மாநில தலைவர் தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . . 

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி ராகுல்காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பு
சென்னை, பிப்ரவரி, 06–02-2014,
பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவரவில்லை.
தற்போதைய நிலையில் அ.தி.மு.க. அணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் கட்சிகள் பேரவை ஆகிய இடம் பெற்றுள்ளன. பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன பா.ம.க.வும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன. தே.மு.தி.க.வின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக இது வரை எந்த கட்சியும் தெரிவிக்க வில்லை.
                                                                                                       மேலும், . . . 

காங்கிரஸ் எம்.பி.க்களே வைக்கிறாங்க ஆப்பு தெலுங்கானாவால் திணறுகிறது காங்கிரஸ்
புதுடில்லி, பிப்ரவரி, 06–02-2014,
நடப்பு ஆளும் காங்கிரஸ் அரசின் கடைசி பார்லி., கூட்டம் இன்றுடன் 2 வது நாளாக ஸ்தம்பித்து போயுள்ளது. பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றுவோம் என்ற கனவில் இருந்த காங்கிரசுக்கு, காங்கிரஸ் எம்,பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளனர். அதுவும் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்டுள்ளனர்.
ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்குள் காங்கிரஸ் கட்சி சந்தித்த எதிர்ப்பு கணைகள் ஏராளம். தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த காரணத்தினால் ஆந்திராவை 2 ஆக பிரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்தது. இது முதல் கடும் போராட்டம், அரசு அலுவலகம் எரிப்பு, என மாறிய கலவரம் ராணுவம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. பல உயிரிழப்புகள், வர்த்தக ரீதியிலான சேதம் என வந்தது மட்டுமே மிச்சம். அறிவித்த காரணத்தினால் தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் அரசு பின் வாங்க முடியாமல் தவித்தது.
                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment