Saturday 1 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-02-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,
ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றம் லோக்சபா தேர்தலை சந்திக்க ஜெயலலிதா தயார் நிலை

சென்னை, 02-02-2014,
லோக்சபா தேர்தலுக்கு முன், அமைச்சரவையிலும், அதிகாரிகள் மட்டத்திலும், அதிரடி மாற்றம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். புகார்களுக்கு ஆளான, கட்சி நிர்வாகிகளும் மாற்றப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த முறை நடக்கவிருக்கும் மாற்றம், தேர்தலுக்கானது என்பதால், மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில், ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக, மூத்த அமைச்சர்களான, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை, சென்னையிலேயே தங்கி இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் தேர்வு குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை பற்றி, ஆளும் கட்சி வட்டாரத்தில் புது தகவல்கள் உலா வருகின்றன.
                                                                                                                       மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிகளுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க தீவிர முயற்சி டெல்லியில் 14 கட்சிகள் 5-ந் தேதி ஆலோசனை
பாட்னா, 02-02-2014,
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
3–வது அணி
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும் போட்டியிட இருக்கின்றன.
இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத இடதுசாரி கட்சிகளும் மற்றும் பல மாநில கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணிகளுக்கு மாறாக 3–வது அணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஏற்கனவே சில முறை மேற்கொள்ளப்பட்டு அது கைகூடாமல் போய்விட்டது.
                                                                                                              மேலும், . . .

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துகள் உதாரணம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை, 02-02-2014,
தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூறிய கருத்துகள் உதாரணம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment