Friday 14 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

தி.மு.க.,வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவக்கம்
திருச்சி, பிப்ரவரி, 15-02-2014,
திருச்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் திமுக.,வின் 10வது மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று கொடியேற்றி துவக்கி வைத்தார்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க.,வின் மாநில மாநாட்டை திருச்சியில் இன்று காலை 10. 50 மணியளவில் கட்சி தலைவர் கருணாநிதி கொடியேற்றி துவக்கி வைத்தார். அவரது வயதை குறிக்கும் வகையில் மாநாட்டு திடலில் 90 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் தி.மு.க.,வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவங்குகிறது.
                                                                               மேலும், . . .
டில்லியில் நிருபர்களிடம் விஜயகாந்த் பாய்ச்சல் கூட்டணி பற்றிய கேள்விக்கு கோபம்
புதுடில்லி, பிப்ரவரி, 15-02-2014,
டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவரை, நிருபர்கள் பேட்டி காண முயன்ற போது, அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா...'' எனக்கூறி, ஆவேசமாக, விஜய்காந்த் முன்னேற முயன்றதால், பாதியிலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது
எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு
டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமர் இல்லத்தை விட்டு வெளியே வந்த, விஜயகாந்தை, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பிரதமர் இல்லத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் தான், இடவசதி உள்ளது என்பதால், விஜயகாந்தை, அங்கு வரும்படி, நிருபர்கள் அழைத்தனர்.காரைவிட்டு, விஜயகாந்த் இறங்கி வருவதற்கு முன், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வந்து, வரிசையாக அணிவகுத்து நின்றனர். பின், சுதீஷ் சைகை காட்டியதும், நிருபர்கள் இருந்த இடத்திற்கு, விஜயகாந்த் வந்தார்.டில்லியில், நேற்று மழை பெய்து, மேக மூட்டமாக இருந்த நிலையிலும், கூலிங் கிளாஸ் அணிந்தபடியே, பேட்டியை விஜயகாந்த் ஆரம்பித்தார். பிரதமரின் சந்திப்பு குறித்து, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல், பேச ஆரம்பித்தார். பின், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து, சில நிமிடங்கள் தாக்கிப் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
                                                                                                         மேலும், . . . 

49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவு
புதுடில்லி, பிப்ரவரி, 15-02-2014,
'ஜன லோக்பால்' மசோதாவை, மாநில லெப்டினன்ட் கவர்னர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தாக்கல் செய்யக் கூடாது' என, டில்லி சட்டசபையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறிய தால், தான் விரும்பிய படி, அந்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போன ஏமாற்றத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், 'ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், கடந்த, 49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்தது.
டில்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி, அமைத்த நாளில் இருந்து, எல்லா விஷயங்களிலும், ஒரே குழப்பமும், சட்டத்திற்கு கட்டுப்படாத தன்மையும் காணப்பட்டது. மத்திய அரசை, கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலும், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் முழுமையாக நிறைவேற்றாதது போன்றவற்றால், கெஜ்ரிவால் அரசு, மக்களின் அதிருப்தியை அதிகமாக சம்பாதித்தது.
                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment