Tuesday 18 February 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது தெலுங்கானா மசோதா நிறைவேறியது பாராளுமன்றத்தில் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 19-02-2014,
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வகைசெய்யும் ‘ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா–2014’ கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ஆந்திராவின் இதர பகுதியான சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
மிளகுப்பொடி வீசினர். இதில் 3 எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சபையில் கண்ணாடிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன. கைகலப்பும் நடந்தது.
எப்படி இருந்தாலும், மசோதாவை நிறைவேற்றியே தீருவது என்று மத்திய அரசு உறுதியாக இருந்தது.
                                                                                          மேலும், . . . 

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேரின் தூக்கு ரத்து விடுதலை பற்றி அரசு முடிவு செய்யலாம் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி, பிப்ரவரி, 19-02-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பரபரப்பான இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
தூக்கு தண்டனை
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 1991–ம் ஆண்டு மே மாதம் 21–ந் தேதி இந்த துயர சம்பவம் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
                                                                                    மேலும், . . .

மார்ச் முதல் வாரத்தில் ஜெ., பிரசாரம் துவக்கம் பிறந்த நாளன்று வேட்பாளர் பட்டியலுடன் வழிபாடு

சென்னை, பிப்ரவரி, 19-02-2014,
அ.தி.மு.க.,வில், இம்மாத இறுதியில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மார்ச் முதல் வாரத்தில், பிரசாரத்தை துவக்க, முதல்வர்,ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., பணியைத் துவக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர முடியாமல், சிதறுண்டு கிடப்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும், அந்தக் கட்சி தலைமை நம்புகிறது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும், கூட்டணியில் சேர்த்து, தேர்தலை சந்திக்க, முடிவு செய்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு தொகுதியிலும், 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்தனர். அனைவரையும், நேர்காணலுக்கு அழைக்க முடியாது என்பதால், மாவட்ட செயலர்களிடம் இருந்து பரிந்துரை பட்டியல் பெறப்பட்டது.
                                                                                                                             மேலும், . . .

No comments:

Post a Comment