Saturday 12 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடி சந்திப்பு
சென்னை, 13-04-2014,
லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
இந்த கட்சிகள் சார்பில், 39 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டு உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும் என, கட்சி மேலிடத்திடம், தமிழக பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலும், தமிழ் புத்தாண்டு தினமான, நாளை, தமிழர் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்து, மோடி, பிரசாரத்திற்கு தமிழகம் வர வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, மோடி இன்று, தமிழகம் வருகிறார்.சென்னை விமான நிலையத்தில் அவர் இறங்கியதும், முதல் நிகழ்ச்சியாக, நடிகர் ரஜினி வீட்டுக்கு செல்கிறார். மோடியும், ரஜினியும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பை முடித்த பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்திற்கு மோடி வருகிறார்.
                                                                                                                     மேலும்.
திருமணத்தை மோடி மறைத்தது தான் ஆர்.எஸ்.எஸ். போதிக்கும் ஒழுக்க நெறியா? இ.கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா கேள்வி
கடலூர், 13-04-2014,
திருமணத்தை மோடி மறைத்தது தான் ஆர்.எஸ்.எஸ். போதிக்கும் ஒழுக்க நெறியா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று காலையில் கடலூருக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும், மதவெறி, பாசிச கொள்கை கொண்ட பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட வேண்டும், இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் ஒரு புதிய அரசு அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து செல்கிறது.
-------------------------------------------------------------------------------------------மேலும்....
பிரசாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணமா? மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டால் சந்திக்க தயார் காங்கிரசுக்கு மோடி சவால்


புதுடெல்லி, 13-04-2014,
பாராளுமன்ற தேர்தலுக்காக ரூ.10 ஆயிரம் கோடி கறுப்பு பணம் செலவிடப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தினால் அதைச் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று நரேந்திர மோடி கூறினார்.பா.ஜனதா தனது தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதாகவும், இதில் 90 சதவீதம் கறுப்பு பணம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:–
விசாரணைக்கு தயார்
பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா 10 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இதில் 90 சதவீத பணம் கறுப்பு பணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பிரசாரத்தின்போது கூறி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா இதைக் கூறி வருகிறார்.10 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
-------------------------------------------------------------------------------------------மேலும்....

No comments:

Post a Comment