Saturday 19 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

‘‘நாட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இனியும் இயக்க முடியாது’’ சோனியா, ராகுல் மீது நரேந்திரமோடி தாக்கு


கவுகாத்தி, 20-04-2014,

சோனியாவும், ராகுலும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் நாட்டை இனியும் இயக்க முடியாது என நரேந்திரமோடி ஆவேசமாகப் பேசினார்.

விலை கொடுக்க வேண்டும்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, அசாமில் காகொய்ஜன் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மன்மோகன்சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்ஜய பாரு ‘விபத்தாக வந்த பிரதமர்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். முடிவுகளை தாயும், மகனும்தான் (சோனியா, ராகுல்) எடுக்கிறார்கள், மன்மோகன் சிங் வெறும் பகட்டுக்குத்தான் என்று நாம் கூறி வந்ததை சஞ்ஜய பாருவின் புத்தகமும் தெரியப்படுத்தி உள்ளது.

‘மவுன மோகன் சிங் அல்ல’

உண்மையான பிரதமர் யார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்தி உள்ளது. மன்மோகன்சிங் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் இதற்கு தாயும், மகனும் ஒரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
                                                                                                                      மேலும், . . .

தொழில் அதிபர்களுக்கு விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது தான் குஜராத் மாடல் ராகுல்காந்தி தாக்கு

நாகான், 20-04-2014,

தொழில் அதிபர்களுக்கு விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது தான் ‘குஜராத் மாடல்’ என்று ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் தாக்குதல் தொடுத்தார்.

அசாம் மாநிலம் நாகானில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாய நிலங்கள் பறிப்பு

மோடி தனது குஜராத் மாடல் (மாதிரி திட்டம்) பற்றி பேசுகிறார். அவர் என்ன செய்தார்? ஏழை விவசாயிகளின் விளை நிலங்களை பறித்தார். இப்படி 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தொழில் அதிபர்களான அதானிகளுக்கு மீட்டர் ஒரு ரூபாய்க்கு கொடுத்தார்.
                                                                                                       மேலும், . . . 

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம் வருகை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை, 20-04-2014,

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

2 ஆண்டு ஜெயில்

22-ந் தேதி மாலை 6 மணியோடு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு ஊர்வலம், பொதுக்கூட்டம், பேரணி போன்ற எந்த விதத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. அதுமட்டுமல்ல எஸ்.எம்.எஸ்., சி.டி., டி.வி, ரேடியோ, இன்டர்நெட் போன்ற எந்த விதத்திலும் பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது.

ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப அனுமதிக் கக்கூடாது என்று தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த விதியை மீறினால், இரண்டு ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
22-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதள முகவரிகள் மூலம் பிரசாரம் செய்வதை கண்டறிவது சிரமம். அமெரிக்காவில் இருந்துகூட ஒருவரால் பிரசாரம் செய்ய முடியும். அதை கண்காணிப்போம்.

                                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment