Tuesday 22 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு முதல் முறையாக தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

சென்னை, 23-04-2014,

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

ஒட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

அதிரடி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலில் வன்முறைகளை தடுப்பதற்காகவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் முதன் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

144 தடை உத்தரவு

இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதை கட்டுப்படுத்துவதற்காகவும், வன்முறை நிகழாமல் சட்டம்–ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் குற்ற விசாரணை முறை சட்டத்தின் 144–ம் பிரிவு தடை உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்துகிறோம்.
                                                                                 மேலும், . . . . 

‘சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்’ ஆந்திராவில் நரேந்திர மோடி பிரசாரம்

நகரி, 23-04-2014,

‘முதன் முதலாக தேர்தலை சந்திக்கும் தெலுங்கானா மக்கள் ஆட்சியை சோனியா குடும்பத்திடம் கொடுத்துவிடாதீர்கள்’ என்று நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

ஆந்திராவில் நரேந்திர மோடி பிரசாரம்

ஆந்திராவில் பாரதீய ஜனதா கட்சியுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு மத்திய மந்திரி சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன்கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சியும் ஆதரவு அளித்து உள்ளது. ஆனால் அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

பாரதீய ஜனதா மற்றும் தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று ஆந்திராவில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆந்திராவில் நேற்று நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் பாலமூர் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது:-
                                                                                                        மேலும், . . . .

நாளை இந்தியாவை வல்லரசாக ஆக்குங்கள்

சென்னை, 23-04-2014,

'லஞ்சம் வாங்காமல் மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்': 'இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. அந்த உரிமையை அனைவரும், தவறாமல் பயன்படுத்தி, லஞ்சம் வாங்காமல், யாருக்கும் பயப்படாமல், மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்தார். அவர், அளித்த பேட்டி:

ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளன?

தமிழகத்தில், 24ம் தேதி, அமைதியாகவும், நேர்மையாகவும், ஓட்டுப்பதிவு நடைபெற, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி கடைசி கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளன. ஓட்டுச் சாவடிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், நிழல் இல்லையென்றால், ஓட்டு போட வருவோர் நிற்பதற்கு வசதியாக,
                                                                                                  மேலும், . . . 

No comments:

Post a Comment