Tuesday 8 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் செலவை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதா? தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கண்டனம் ‘‘ஜனநாயகத்திற்கு எதிரான செயல்’’

திருவள்ளூர், ஏப்ரல், 09-04-2014,
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரியை ஆதரித்தும், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபாலை ஆதரித்தும் 2 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருவள்ளூர் வடமதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
மகத்தான வெற்றி
2011–ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வை எந்த அளவுக்கு வெற்றி பெற வைத்தீர்களோ, அதைவிட மகத்தான வெற்றியை நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கின்றேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு.
                                                                                                                மேலும், . . . 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு
காசர்கோடு, ஏப்ரல், 09-04-2014,
தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு
கேரள மாநிலம் காசர்கோட்டில் பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரனை ஆதரித்து பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்து, தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுபற்றி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக கூறினார்.
                                                                                                        மேலும், . . . . 

தந்தையின் குடியினால் மகள் பிறந்தநாளில் சோகம் கிணற்றில் வீசி மகனை கொன்று தாய் தற்கொலை

அரூர், ஏப்ரல், 09-04-2014,
அரூர் அருகே கிணற்றில் வீசி மகனை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார். தண்ணீரில் தத்தளித்த 8 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள்.
இந்த துயர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மகளின் பிறந்த நாள்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் பூபதி(வயது30). தச்சு தொழிலாளி. இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த சூர்யா(28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு பூவாசம்(8) என்ற மகளும், ஹரீஸ்(4) என்ற மகனும் இருந்தனர். நேற்று பூவாசத்திற்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அதன்பின்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பூபதி குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது.

                                                                                                               மேலும், . . . 

No comments:

Post a Comment