Monday 7 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் உறுதி ஊழலை ஒழிக்க, விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை
புதுடெல்லி, ஏப்ரல், 08-04-2014,
பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
52 பக்க தேர்தல் அறிக்கை
பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் இதனை அறிக்கையை வெளியிட்டனர்.
52 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் பற்றிய விவரம் வருமாறு:–
ராமர் கோவில் கட்டப்படும்
* டெல்லியில் உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
* அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும்.
* அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை.
                                                                                                      மேலும், . . . 

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 367 மனுக்கள் தள்ளுபடி
சென்னை, ஏப்ரல், 08-04-2014,
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளில், நேற்று, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், 367 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும், மார்ச் 29ம் தேதி, மனு தாக்கல் துவங்கியது. கடந்த 5ம் தேதி நிறைவு பெற்றது. மொத்தம் 1,261 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று, மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், நீலகிரி பா.ஜ., வேட்பாளர், சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் உட்பட, 367 பேரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. 894 பேர் மனுக்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர், நாளை (9ம் தேதி) மாலை, 3:00 மணிக்குள், வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஆலந்துார் சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க., வேட்பாளர் காமராஜ் மனுவை ஏற்க, ஆம் ஆத்மி வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு, வேட்பு மனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை, 11:00 மணிக்கு, இத்தொகுதியில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், குருமூர்த்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முறையாக மனு தாக்கல் செய்யாமல், அசட்டையாக நடந்து கொண்டதே, மனு தள்ளுபடியானதற்கு காரணம் என, கூறப்படுகிறது. இதனால், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிட, கோபால கிருஷ்ணன் (அ.தி.மு.க.,), ராம்குமார் (அ.தி.மு.க., மாற்று), ராஜா (தி.மு.க.,), குருமூர்த்தி (பா.ஜ.,), அன்பரசு (பா.ஜ., மாற்று), காந்தி (காங்.,) ராணி (ஆம் ஆத்மி), ரமேஷ் பாபு (ஆம் ஆத்மி மாற்று) உட்பட, 16 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன.இதில், பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி உட்பட, ஆறு வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
                                                                                                              மேலும், . . . 

அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்

சென்னை, ஏப்ரல், 08-04-2014,
அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வாக்கு சேகரிக்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment