Saturday 26 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை சென்னை ராணுவ அதிகாரி பலி 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர், 27-04-2014,

காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தீவிரவாதிகள்

அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.
                                                                               மேலும், . . . . 

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தயார்

புதுடெல்லி, 27-04-2014,

'ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக இடங்களில்...

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இன்னும் மூன்று கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின், மே 16ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
                                                                                                             மேலும், . . .

மின்வெட்டு தொடர்கிறது - கேட்க நாதியில்லை


சென்னை, 27-04-2014,

தமிழக முதல்வர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் முதன்முறையாக நேற்று அதிகபட்சமாக, 3,870 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

மின் உற்பத்தி

அதிகரித்து உள்ள போதிலும், மின் தேவை அதை விட அதிகமாக உள்ளதால், மின்வெட்டும் தொடர்கிறது. தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகாவாட். இதில், தூத்துக்குடியில், 1,050, மேட்டூரில், 840, வட சென்னையில், 630, எண்ணூரில், 450 என, அனல் மின் நிலையங்களில் மட்டும் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.மேலும், கட்டுமானப் பணி முடிந்து மின் வாரியத்திடம் ஒப்படைத்த, மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட், வட சென்னை புது யூனிட்டில், 600 மெகாவாட், பழைய, புதிய அனல் மின் நிலையங்கள் மூலம், 4,170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். எனினும், எண்ணூர் மின் நிலையம் பழமையானது என்பதால், குறைந்த அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முழு அளவில் மின் உற்பத்தி நடந்தால், 3,800 முதல், 4,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.
                                                                                                              மேலும், . . .

கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோர் போலீஸ் விசாரணை

கோவை, 27-04-2014,

கோவையில் காதல் கணவரை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு மகளை கடத்திய பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதலித்தனர்

கோவை கணபதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் சுதாகர் (வயது25). இவர் அத்திப்பாளையம் பிரிவில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரும் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த மஞ்சு பட்டேல் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர் வடமாநில பெண் ஆவார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இந்த நிலையில் இருவரது காதலுக்கும் சுதாகர் வீட்டில் பச்சைக்கொடி காட்டினர்.
                                                                    மேலும், . . . 

No comments:

Post a Comment