Saturday 5 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நரேந்திரமோடி தான் அடுத்த பிரதமர் வேட்பு மனு தாக்கல் செய்த அத்வானி பேச்சு
காந்திநகர், ஏப்ரல், 06-04-2014,
நரேந்திரமோடி தான் அடுத்த பிரதமர் என்று அத்வானி தெரிவித்தார். காந்திநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.
சமரசம் ஏற்பு
குஜராத் மாநிலத்தலைநகர் காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி. தற்போது 7-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். 86 வயது அத்வானி வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அதனை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் வழக்கம்போல் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட கட்சியின் மேலிடம் அனுமதி அளித்தது. இதனால் வலுக்கட்டாயமாக காந்தி நகரில் போட்டியிடுவதற்கு அவர் தள்ளப்பட்டார் என்று கூறப்பட்டது.
                                                                                       மேலும், . . . . 

24-ந் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது 40 தொகுதிகளில் 1,359 பேர் மனு தாக்கல்

சென்னை, ஏப்ரல், 06-04-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி மே மாதம் 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வருகிற 24-ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே, காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆகிய இரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
                                                                                                              மேலும், . . . 

இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசி தேர்தலாக இருக்கலாம் மக்களுக்காக நல்லாட்சியை தர வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் கோவை பிரசார கூட்டத்தில் கருணாநிதி உருக்கம்
கோவை, ஏப்ரல், 06-04-2014,
இதுவே நான் கலந்து கொள்ளும் கடைசி தேர்தலாக இருக்கலாம். எனவே மக்களுக்காக நல்லாட்சியை தர வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்று கோவை பிரசார கூட்டத்தில் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
பொதுக்கூட்டம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அ.ராசா, கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் கணேஷ்குமார், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

                                                                                                                 மேலும், . . .

No comments:

Post a Comment