Thursday 3 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தலைவர்களின் பொதுக்கூட்ட செலவை
வேட்பாளர் கணக்கில் சேர்ப்பது நியாயமற்றது
தேர்தல் கமிஷனை எதிர்த்து அ.தி.மு.க. வழக்கு
ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, ஏப்ரல், 04-04-2014,
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று நாமக்கல் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
கருப்பட்டி பாளையம் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது கூறியதாவது:-
சாதனைகள்
கடந்த 34 மாத கால ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி, தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை என்னால் அளிக்க முடியுமோ, அவற்றையெல்லாம் அளித்து இருக்கிறேன்; அளித்துக்கொண்டும் வருகிறேன்.
                                                                                    மேலும், . . . . . 

பொதுக்கூட்டத்துக்கு வாக்காளரே வரமுடியாத அளவுக்கு கெடுபிடியா? ‘‘பழைய சட்ட விதிகளின்படிதான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது” ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பிரவீன்குமார் பதில்
சென்னை, ஏப்ரல், 04-04-2014,
பொதுக்கூட்டத்துக்கு வாக்காளரே வர முடியாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கெடுபிடி செய்வதாக ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், ‘‘பழைய சட்ட விதிகளின்படிதான் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது’’ என்று பதில் அளித்தார்.
ஜெயலலிதா பேச்சு
நாமக்கல் மற்றும் சேலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வேட்பாளரின் செலவு கணக்கு தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள உத்தரவு ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும். இதனால் வேட்பாளரே தேர்தல் பிரசார கூட்டத்தில் நிற்க முடியாத, வேட்பாளர் பெயரை கூட உச்சரிக்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும். எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடுக்கப்படும்’’ என்று பேசினார்.
பழைய விதிகள்தான்
இதுகுறித்து கேட்டபோது, பிரவீன்குமார் அளித்த பதில் வருமாறு:–
                                                                                                                                         மேலும், . . 

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது ஏன்? கருணாநிதி விளக்கம்

சென்னை, ஏப்ரல், 04-04-2014,
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது ஏன்? என்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அலைக்கற்றை ஊழல்
கேள்வி:– ‘‘தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க.’’ என்று ஜெயலலிதா விமர்சனம் செய்கிறாரே?.
                                                                                                                     மேலும், . . . . 

No comments:

Post a Comment