Monday 21 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார் ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள் சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

சென்னை, 22-04-2014,

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.

சூறாவளி பிரசாரம்

புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சென்னையில் 3 நாட்கள்

அதன் பின்னர், கடந்த 19–ந் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் (வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை) வேன் மூலம் வீதி, வீதியாக சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
 

 
                                                                        மேலும், . . . 

‘பாரதீய ஜனதா கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்’ வேலூரில் எல்.கே.அத்வானி பேச்சு

வேலூர், 22-04-2014,

‘பாரதீய ஜனதா கூட்டணியால் அரசியலில் மாற்றம் ஏற்படும்’ என்று வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேசினார்.
பொதுக்கூட்டம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் மாங்காய் மண்டி அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன்ராஜிலு, தேசிய பொறுப்பாளர் முரளிதரராவ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது:–

நான் முதன்முதலில் பாராளுமன்றத்தில் சந்தித்த நபர் சிவாஜிகணேசன். அவரிடம் நீங்கள் நடித்த ஒரு தமிழ்படத்தை பார்த்து உள்ளேன் என்றேன்.
                                                                                                  மேலும், . . . 

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டி ராகுல்காந்தி அறிவிப்பு

ராமநாதபுரம், 22-04-2014,

பாராளுமன்ற தேர்தலை போன்று தமிழகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்று ராமநாதபுரத்தில் நடந்த பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி பிரசாரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று ராமநாதபுரம் வந்தார். இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டி.பிளாக் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:–

பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் இன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதை நினைவுகூர்கிறேன். 50 ஆண்டுகாலத்துக்கு முன்பே ஏழை எளிய குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை தீட்டித் தந்தது நமக்கு எல்லாம் பெருமை.
                                                                                                 மேலும், . . .

No comments:

Post a Comment