Saturday 19 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாஜக ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டில் பதுக்கிய ஊழல் பணம் மீட்கப்படும் ராஜ்நாத்சிங் உறுதி
தஞ்சாவூர், ஏப்ரல், 19–04-2014,
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் தஞ்சை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பழ.அண்ணாமலை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்புமுருகானந்தம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அகோரம், நாகை பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பேசினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிறது. இதில் காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி, மாறி காங்கிரஸ் அரசுடன் கூட்டணி அமைத்துள்ளன.
                                                                                                        மேலும், . . . 

ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவு மீட்கப்படும்: சீமான்

வானூர், ஏப்ரல், 19–04-2014,
விழுப்புரம் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து திருச்சிற்றம் பலம் கூட்டு ரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:–
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஏமார்ந்து போனோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போடவேண்டியது வாக்கு இல்லை. வாக்கரிசி தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி என மாறி மாறி ஆட்சி நடத்தி இருந்தாலும் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்ற தி.மு.க வினால் தமிழ்நாட்டுக்கு என்ன பலன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்?
தேர்தல் அறிக்கையில் கட்ச தீவை மீட்க தீவிரமாக போராடுவோம் என்கிறார் கலைஞர். அப்படியானால் கட்ச தீவை மீட்க இதுவரை தீவிரமாக போராடியது இல்லையா, முதல்வர் பதவியில் இருந்த கலைஞர் இதற்கு போராடியது இல்லை என்றால் ஏன் முதல்வர் பதவி வேண்டும், தேர்தலில் ஏன் வாக்கு கேட்டு வருகிறீர்கள்?
                                                                             மேலும், . . .  

22-ந் தேதி முதல் வேட்பாளர்கள், கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடுகள்
சென்னை, ஏப்ரல், 19–04-2014,
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. அதைத் தொடர்ந்து 22-ந் தேதியில் இருந்து வேட்பாளர்கள், அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதி மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 24-ந் தேதி நடக்க உள்ளது. இதற்கான சில ஒழுங்குமுறை விதிகள், 22-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும்வரை நடைமுறைக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பான கூட்டங்கள், ஊர்வலங்களை யாரும் நடத்துவது, அதில் பங்கேற்பது தடை செய்யப்படுகிறது.
                                                                                    மேலும், . . . 

No comments:

Post a Comment