Saturday 12 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதி ஜெயலலிதா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப் பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.




திருநெல்வேலி, ஏப்ரல், 12-04-2014,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருநெல்வேலி பாராளு மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விளக்கம்
இன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது. திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர். இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
இதற்கு முன்பு 2 முறை நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.


                                                                                                மேலும், . . . 

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஜெயலலிதா பட்டியலிட்டு பேச்சு
நெல்லை, ஏப்ரல், 12-04-2014,
நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா பேசினார்.
பாளையங்கோட்டை பெல் நகரில் நேற்று நடந்த அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



மருத்துவமனை
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நிறைவேற்றிக் கொடுத்து உள்ளோம். நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி


                                                                                                        மேலும், . . . .

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் சாதி, மதத்தை சொல்லி ஓட்டுக்கேட்பவர்களை புறக்கணியுங்கள் வைகோ பேச்சு

நெல்லை, ஏப்ரல், 12-04-2014,
“சாதி, மதத்தின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கிறவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்“ என்று தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் வைகோ கூறினார்.
வைகோ பிரசாரம்
தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரத்தை தொடங்கினார். கோவில் நுழைவு வாயில் முன்பு அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார்.
பின்னர் நடுவக்குறிச்சியில் அவருக்கு, ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றார்கள். நாதசுரம், தவில் இசைக்கலைஞர்கள் இன்னிசை வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து சேர்ந்தமரம், சுரண்டை, பாவூர்சத்திரம் பிரசாரம் செய்துவிட்டு, தென்காசிக்கு வந்தார். அங்கு காசிவிசுவநாத சுவாமி கோவில் அருகே வடக்கு, மேற்கு ரதவீதிகள் சந்திக்கும் இடத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அங்கு வைகோ பேசியதாவது:-

                                                                                                                  மேலும்,. . . .,

No comments:

Post a Comment