Friday 4 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பா.ஜனதா குற்றப்பத்திரிகை அனைத்து துறைகளிலும் தோல்வி கண்டுள்ளதாக குற்றச்சாட்டு
புதுடெல்லி, ஏப்ரல், 05-04-2014,
10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பா.ஜனதா குற்றப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
பாராளுமன்றத் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. 10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆட்சியைப் பிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், 10 ஆண்டு கால மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது அந்தக்கட்சி நேற்று ஒரு குற்றப்பத்திரிகையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
                                                                                         மேலும், . . . . . . 

நாற்காலியை கைப்பற்ற பொய் பேசுபவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவரா? நரேந்திர மோடி மீது சோனியா மறைமுக தாக்கு
ராஞ்சி, ஏப்ரல், 05-04-2014,
நாற்காலியை கைப்பற்ற பொய் பேசுபவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவரா? என்று நரேந்திர மோடி குறித்து சோனியா காந்தி பேசினார்.
மோடிக்கு பதில்
டெல்லி இமாமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். அதை பா.ஜனதா பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
இந்நிலையில், அதற்கு சோனியா காந்தி நேற்று பதிலடி கொடுத்தார். ஜார்கண்ட் மாநிலம் ராம்காரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசியதாவது:–
                                                                                          மேலும், . . . . .

மும்பையில் பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு 3 பேருக்கு தூக்கு தண்டனை கற்பழிப்பு வழக்கில் முதல் முறையாக அதிரடி தீர்ப்பு
மும்பை, ஏப்ரல், 05-04-2014,
பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. கற்பழிப்பு வழக்கில் முதல் முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொடூர கற்பழிப்பு
மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டர், 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் (ஆகஸ்டு) அதே வளாகத்தில் 22 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணரும் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தின.
                                                                                                                              மேலும், . . . .

No comments:

Post a Comment