Wednesday 2 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு
ரேபரேலி, ஏப்ரல், 03-04-2014,
பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
தமிழகம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். இந்த தொகுதி கடந்த 1960-ம் ஆண்டு முதல் நேரு-இந்திரா குடும்பத்தின் கோட்டையாக விளங்கி வருகிறது.
                                                                                        மேலும், . . . . 

தனிக்கட்சி தொடங்கமாட்டேன் தி.மு.க.வை காப்பாற்றுவது தான் லட்சியம் தஞ்சையில் மு.க.அழகிரி பரபரப்பு பேச்சு
தஞ்சாவூர், ஏப்ரல், 03-04-2014,
தனிக்கட்சி தொடங்கமாட்டேன். தி.மு.க.வை காப்பாற்றுவது தான் லட்சியம் என தஞ்சையில் நடைபெற்ற விழாவில் மு.க.அழகிரி கூறினார்..
மு.க.அழகிரி தஞ்சை வருகை
தஞ்சையில் நடைபெற்ற ஒரு விழாவில் மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
எனது படம் போட்டு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்று நோட்டீசு ஒட்டியதில் என்ன தவறு. அதற்காக எனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். எதற்காக நீக்கீனீர்கள் என்று தலைவரை நேரில் சந்தித்து கேள்வி கேட்டேன். அவர் பொதுச் செயலாளரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்வதாக கூறினார்.
                                                                                           மேலும், . . . . 

பாலுக்கு காவல் இருக்கும் பூனையை பார்த்ததில்லை ராகுல் காந்திக்கு நரேந்திரமோடி சூடான கேள்வி


கொடர்மா, ஏப்ரல், 03-04-2014,
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஊழல்வாதிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, அவர்களா நாட்டை காவல் காக்கப்போகிறார்கள் என்று ராகுல் காந்திக்கு நரேந்திரமோடி கேள்வி விடுத்தார்.
125 கோடி மக்கள்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு ஜூமார்டாலியா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:–
ஒரு ஒற்றை மனிதரின் அறிவால், சிந்தனையால் இந்த நாடு இயங்கி விடாது. நாடு இயங்குவதற்கு நாட்டின் 125 கோடி மக்களின் எண்ணம், சிந்தனை, அறிவாற்றல் தேவை. 125 கோடி மக்களும் ஒன்றுபட்டால், முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்ட முடியும்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, டெல்லியில் ஆட்சி அதிகாரம் செலுத்துவதில்தான் கவனத்தை செலுத்துகிறது. டெல்லி சிம்மாசனத்தை பிடிப்பதற்கு ஒரு கருவியாகத்தான் தேர்தலை காங்கிரஸ் கட்சி பார்க்கிறது.

                                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment