Sunday 6 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அசாமில் 5 தொகுதிகள் திரிபுராவில் ஒரு தொகுதி பாராளுமன்றத்துக்கு இன்று முதல்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதுடெல்லி, ஏப்ரல், 07-04-2014,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வர்ணிக்கப்படும் இந்தியாவில், பாராளுமன்றத்துக்கு 9 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இன்று முதல் கட்ட தேர்தல்
இந்த தேர்தல் இன்று (7-ந் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 12-ந் தேதி முடிகிறது. முதல் கட்டமாக, அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது.
அசாமில் தேஜ்பூர், காலியாபார், ஜோரத், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளும், திரிபுராவில் திரிபுரா மேற்கு தொகுதியும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் ஆகும்.
                                                                                 மேலும், . . . . . 

300 இடங்களை தாருங்கள் ‘இந்தியாவை வலிமையான நாடு ஆக்குகிறேன்’ நரேந்திரமோடி வேண்டுகோள்
பிஜ்னோர், ஏப்ரல், 07-04-2014,
‘இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற, 300 இடங்களுக்கு மேல் தாருங்கள்’ என நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மல்யுத்தம்
பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி நேற்று உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள பிஜ்னோர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 போர் வீரர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்) உள்ளனர். இவர்கள் உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று மல்யுத்தம் புரிகின்றனர். ஆனால் டெல்லியில் ஆட்சி புரிவதற்கு ஒன்றாக இணைகின்றனர். இவர்கள் ஊழல் என்ற பெயரில் ஒன்றாக இணைந்துள்ளனர். இவ்வாறு 3 கட்சிகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றன.
                                                                                   மேலும்,  . . . . . 

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

சென்னை, ஏப்ரல், 07-04-2014,
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
6 நாட்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதியிலும் மொத்தமாக ஆயிரத்து 318 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198 பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள், இரண்டு பேர் அரவாணிகள். வடசென்னையில் அதிகபட்சமாக 53 பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

                                                                                                      மேலும், . . . . 


No comments:

Post a Comment