Thursday 10 April 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-04-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

முதல் முறையாக வேட்பு மனுவில் மனைவி பெயரை குறிப்பிட்டார் - நரேந்திரமோடி பரபரப்பான தகவல்கள்
வதோதரா, ஏப்ரல், 11-04-2014,
நரேந்திரமோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் திருமண விவகாரம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் இது என்றோ பகிரங்கமாக அறிவித்தது இல்லை. குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோதுகூட அவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார்.
ஆனால் சமீபத்தில், மோடி மணமானவர், அவருக்கு 17 வயதில் திருமணமானது, அவரது மனைவி யசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என தகவல்கள் வெளியாகின.
ஓய்வு பெற்ற நிலையில், அந்த பெண் தனது வாழ்வில் பெரும்பகுதியை இறைவழிபாட்டில் கழிப்பதாகவும், தனது விதி மற்றும் கெட்ட நேரத்தால்தான் மோடியுடன் இணைந்து வாழ முடியாமல் போய்விட்டதாகவும் பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
                                                                                          மேலும், . . . 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஓப்புக்கொள்கிறாரா? நீலகிரி பிரசாரத்தில் ஜெயலலிதா கேள்வி

சென்னை, ஏப்ரல், 11-04-2014,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது என்பதை கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக நேற்று காரமடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:–
மக்கள் சேவையில் நாட்டம்
வாக்காள பெருமக்களே. மக்கள் சேவையில் நாட்டமுள்ள கட்சி அ.தி.மு.க. மக்கள் நலனை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி அ.தி.மு.க. ஆனால் தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை எடுக்கும் கட்சி தி.மு.க. இந்த தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் ஆ.ராசா. சென்ற முறையும் ராசா
                                                                                                                 மேலும், . . . 

11 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களில் 3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல் 91 தொகுதிகளில் விறு, விறுப்பான ஓட்டுப்பதிவு
புதுடெல்லி, ஏப்ரல், 11-04-2014,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
91 தொகுதிகளில் தேர்தல்
முதல் கட்ட தேர்தல் கடந்த கடந்த 7–ந்தேதியும், 2–வது கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் நடைபெற்றது.
3–வது கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது என்ற விவரம் வருமாறு:–
                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment